காந்த சக்தி மனிதனின் புதிய சாதனை…..

Written by vinni   // January 2, 2014   //

magnet_man_001.w245ஜார்ஜியாவை சேர்ந்த காந்த சக்தி மனிதன் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். ஜார்ஜியாவின் டிபிலிசி நகரில் வசிப்பவர் எலிபெர் எல்ஷியேவ்(வயது 42).

குத்துச்சண்டை பயிற்சியாளரான எலிபெர், அபார காந்த சக்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதாவது, இரும்பு பொருட்கள் இவரது உடலில் ஒட்டிக் கொள்கிறது.

கடந்த 2011–ம் ஆண்டில் பொதுமக்கள் மத்தியில் தனது உடலில் 50 கரண்டிகளை (ஸ்பூன்) ஒட்ட வைத்து சாதனை நிகழ்த்தினார். சில நாட்களுக்கு முன்பு அவரே இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

தற்போது தனது மார்பு, முதுகு பகுதியில் 53 கரண்டிகளை ஒட்ட வைத்து பார்வையாளர்களை அசத்தினார்.

இதுபற்றி எலிபெர், காந்த சக்தி இயற்கையாகவே தனது உடலில் அமைந்து விட்டதாகவும், எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் குட்டி விமானம், காலி ரெயில் பெட்டி ஆகியவற்றை இழுத்து சாதனை படைக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.


Comments are closed.