சூதாட்ட மோகத்தால் குழந்தையை தவிக்க விட்ட பாசக்கார தாய்

Written by vinni   // January 2, 2014   //

CASINOசூதாட்டம் விளையாடும் மோகத்தில் குழந்தையை 8 மணிநேரம் பூட்டிய காருக்குள் தன்னந்தனியாக தவிக்கவிட்டு சென்ற பாசக்கார தாயின் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் பிரபலமான சூதாட்ட விடுதி ஒன்று உள்ளது.

இங்கு புத்தாண்டு தினத்தில் பாட்லிமோர் நகரை சேர்ந்த பெண் ஒருவர், குழந்தையுடன் சூதாட வந்துள்ளார்.

சூதாட்டத்தின் மீதிருந்த ஆர்வத்தால், பூட்டிய காருக்குள் குழந்தையை தன்னந்தனியே தவிக்க விட்டுச் சென்றுள்ளார்.

மாலை 7 மணியளவில் காவலாளி ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்த போது, குழந்தையின் அழுகுரல் கேட்டு மேனேஜருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் மாற்றுச்சாவியின் மூலம் குழந்தையை வெளியே எடுத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இதற்கிடையே சூதாட்டத்தில் தோல்வி அடைந்த தாய், காரில் குழந்தையை இல்லை என்றதும் அதிர்ச்சி அடைந்து காவலாளியிடம் விசாரித்துள்ளார்.

குழந்தையின் மீது அஜாக்கிரதையாக இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தாயை பொலிசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து 50 ஆயிரம் டொலர்கள் அபராதத்துடன் சொந்த ஜாமினில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது மேரிலேண்ட்டில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் இக்குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.