பிற நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க தயாராகிறதா ஜப்பான்?

Written by vinni   // January 2, 2014   //

japanதங்கள் நாட்டு படைகள் பிற நாடுகளின் மீது படையெடுக்கும் படி அரசியல் சாசனத்தில் ஜப்பான் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டாம் உலகப் போரின்போது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது ஜப்பான் படையெடுத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதனைதொடர்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால், முப்படைகளும் நாட்டை பாதுகாப்பதற்கு மட்டுமே பயன்படும் என வரையறை செய்யப்பட்டது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய தீவுகள் விவகாரத்தில் சீனாவின் அதிரடி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, ஜப்பான் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்ஸா அபே அளித்துள்ள பேட்டியில், 2020-ஆம் ஆண்டுக்குள் ஜப்பானின் அரசியல் சாசனத்தில் மாற்றம் வரலாம்.

சுய பாதுகாப்புக்காக மட்டுமே ராணுவம் என்ற நிலை மாறுகையில், இந்த பிராந்தியத்தில் குலைந்துள்ள அமைதியும், ஸ்திரத்தன்மையும் மீண்டும் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது புத்தாண்டு உரையில், நம் நாட்டின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டு 68 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப அதில் மாற்றம் கொண்டு வருவது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.