என் கணவர் சாப்ட்ற ஸ்டைல் எனக்கு பிடிக்கல! விவாகரத்து கோரும் இளம் பெண்

Written by vinni   // January 2, 2014   //

eating_001திருமணமாகி ஒரே வாரத்தில் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார் இளம்பெண் ஒருவர்.

குவைத் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், விவாகரத்து கோரியுள்ளார்.

இதற்கு காரணத்தை கேட்டால் வியப்பு தான் வருகிறது, அதாவது கணவர் உணவு உண்ணும் ஸ்டைல் பிடிக்கவில்லையாம்.

இதுகுறித்து அப்பெண் தன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, எனக்கு திருமணமாகி ஒரு வாரமே ஆகிறது.

என் கணவர் நாகரிகமற்ற முறையில் உணவு உண்பதை பழக்கமாகக் கொண்டுள்ளார்.

அவரின் நாகரிகமற்ற செயல்பாடுகள், என்னை மிகவும் வெறுப்படையச் செய்துள்ளன.

இதனால் இருவரும் அடிக்கடி வாக்குவாதம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே என் கணவரை விவாகரத்து செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வித்தியாசமான காரணங்களுக்காக விவாகரத்து செய்வது அரபு நாடுகளில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


Similar posts

Comments are closed.