3வது நாளாகவும் மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது

Written by vinni   // January 2, 2014   //

2251848-a-small-wooden-boat-anchored-in-the-bayஇலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி, பாம்பன் மீனவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் 3வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

பாம்பன் பகுதியை சேர்ந்த 18 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கடந்த 29-ம் திகதி கைது செய்தனர். இதனையடுத்து 18 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தனுஷ்கோடி அருகே, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இரண்டு நாட்களாக கற்கள், போத்தல்களை வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மீன்பிடி வலைகளையும் அவர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பாம்பன் மீனவர்கள் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 271 தமிழக மீனவர்கள் மற்றும் 79 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Similar posts

Comments are closed.