அகதிகள் மீதும் கரிசனை கொள்ள வேண்டும்: போப்

Written by vinni   // January 2, 2014   //

1045622934pope_francisநகரங்களை வடிவமைப்பதில் மாத்திரம் கவனம் செலுத்தாது, இருப்பிடங்களை இழந்தவர்கள் மற்றும் அகதிகள் மீதும் கரிசனை கொள்ள வேண்டும் என பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

வத்திக்கானில் பாப்பரசர் பதவியேற்றதன் பின்னர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது முதலாவது புத்தாண்டு திருப்பலி பூஜைகளை ஒப்புக்கொடுத்தார்.

கடந்த வருடம் இத்தாலி நாட்டிற்கே அதிகளவான அகதிகள் தஞ்சமடைந்ததாக சுட்டிக்காட்டிய பாப்பரசர், அதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

திருப்பலியின் பின்னர் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்களிடம் பாப்பரசர் தனது புத்தாண்டு வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.


Similar posts

Comments are closed.