சில நிமிடங்களில் புத்தாண்டு துவங்கியதால் ஓராண்டு தள்ளி பிறந்த இரட்டை குழந்தைகள்

Written by vinni   // January 2, 2014   //

babyநேற்று முன்தினம் அமெரிக்காவில் 2 பெண்களுக்கு நடைபெற்ற வெவ்வேறு பிரசவங்களில் இரட்டை குழந்தைகளில் ஒன்று 2013-ம் ஆண்டிலும், மற்றொன்று 2014-ம் ஆண்டிலும் பிறந்துள்ளன.

கடந்து சென்ற டிசம்பர் 31ம் திகதி நள்ளிரவு இந்த பிரசவங்கள் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ஸ்டார் வாஷிங்டன் வைத்தியசாலையில் 31ம் திகதி நள்ளிரவு 11.58 மணிக்கு லொர்ரெய்ன் யாலெனி பெகாசோ என்ற பெண்ணுக்கு நடைபெற்ற தலைப் பிரசவத்தில் 6 பவுண்ட் எடையுள்ள அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அதை தொடர்ந்து, அடுத்த 3 நிமிடங்களில் (அதாவது) 2014 ஜனவரி மாதம் முதலாம் திகதி நள்ளிரவு 12.01 மணிக்கு இரண்டாவதாக 5 பவுண்ட் எடையுடன் அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

இந்த இரட்டை குழந்தைகளின் பிறப்பில் உள்ள கால இடைவெளி வெறும் 3 நிமிடங்கள் மட்டும்தான் என்றபோதிலும், முன்னதாக பிறந்த பெண் குழந்தையின் பிறந்த தேதி 31-12-2013 என்றும், அடுத்ததாக பிறந்த ஆண் குழந்தையின் பிறந்த தேதி 1-1-2014 எனவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், டொரொண்டோ நகரில் உள்ள கிரெடிட் வேல்லி வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட லிண்ட்ஸே ஸல்குவெரியோ என்ற பெண்ணுக்கு 31-12-2013 பின்னிரவு 11.52 மணிக்கு 6 பவுண்ட் எடையுள்ள அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்த 8 நிமிடங்களில் (அதாவது) 1-1-2014 அதிகாலை 12 மணி 38 விணாடிக்கு மற்றொரு பெண் குழந்தையையும் அவர் பிரசவித்தார்.

ஒரே பிரசவத்தில், வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த 2 தாய்களும், அவர்களின் 4 குழந்தைகளும் நல்ல நிலையில் உள்ளதாக வைத்தியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Similar posts

Comments are closed.