பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவேன்: ரஷ்ய ஜனாதிபதி சூளுரை

Written by vinni   // January 2, 2014   //

russiaரஷ்யாவின் வோல்காகிரேட் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், அங்கு தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் அங்கு ஒரு ரயில் நிலையத்திலும், டிராலி பஸ்சிலும் கடந்த 26, 27 திகதிகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.

இந்தக் குண்டு வெடிப்புகளில் 34 பேர் பலியாகி விட்டனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி ஜனாதிபதி விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். அங்கு வடக்கு காகசஸ் பகுதியை இஸ்லாமிய நாடாக அறிவிக்கக்கோரி, தீவிரவாதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் அங்கு குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு செய்தி விடுத்து ஜனாதிபதி விளாடிமிர் புதின் தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசினார்.

அப்போது அவர் இரண்டு குண்டு வெடிப்புகளிலும் தொடர்புடைய தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவேன் என்று சபதம் செய்தார். நாட்டில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

இதற்கிடையே குண்டு வெடிப்பு நடந்த இடங்களில் பொதுமக்கள் மலர் கொத்துகள் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.