ஸ்டாலினின் புத்தாண்டு பரிசு ரூ.100

Written by vinni   // January 1, 2014   //

stalin_wife_001புத்தாண்டையொட்டி தம்மை சந்திக்க வந்த திமுக தொண்டர்களுக்கு தலா ரூ.100 கொடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அசத்தியுள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பொது மக்கள் பலர் தங்களது குல தெய்வம் கோவிலுக்கும், இஷ்ட தெய்வ கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்வது வழக்கம்.

இன்னும் சிலர் தங்களது தந்தை , தாய் மற்றும் குரு ஆகியோரை நேரில் சென்று வணங்கி ஆசி பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதே போல, திமுக முன்னணி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து ஆசி வாங்குவது வழக்கம். இந்த முறை திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்து பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையை காரணம் காட்டி , தொண்டர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே போல, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டிலும், தொண்டர்கள் வரிசை கட்டி க்யூவில் நின்றனர். அதிகாலை முதலே அவரது விசுவாசிகள் கூட்டம் களைகட்டியது.

தொண்டர்கள் கொண்டு வந்த அன்புளிப்புகளை ஏற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு தனது அன்பளிப்பாக ரூ.100 கொடுத்து அசத்தியுள்ளார்.


Similar posts

Comments are closed.