உலகத்தை கலக்கும் தகவல்தொழில்நுட்ப துறை

Written by vinni   // January 1, 2014   //

3d_tech_003மென்பொருள் புரோகிராம்களை தயாரிப்பவர்கள் இன்று உலகமெங்கும் மிக முக்கியமான நபர்களாக கருதப்படுகிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் நமது அன்றாட பணிகள் பெரும்பாலும் டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருப்பதால், மென்பொருள் புரோகிராம் தயாரிப்பவர்களின் பணி அத்தியாவசிய ஒன்றாக இருந்து வருகிறது.

சமீபத்தில் ஐடிசி அமைப்பு எடுத்த ஆய்வின்படி, மென்பொருள் தயாரிப்பவர்களாக உலகில் இயங்குபவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 85 லட்சம் ஆகும்.

இவர்களில் 1 கோடியே 10 லட்சம் பேர், நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்கள், மற்ற 75 லட்சம் பேர் பொழுதுபோக்கிறாக, சாப்ட்வேர் தயாரிக்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.

கம்ப்யூட்டர்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை, சாப்ட்வேர் புரோகிராமர்களையும் சேர்த்து 2 கோடியே 90 லட்சம் என அறியப்பட்டுள்ளது.

மொத்தமாக அமெரிக்காவில் 19 சதவிகிதம் பேரும், சீனாவில் 10 சதவிகித பேரும், இந்தியாவில் 9.8 சதவிகித பேரும் உள்ளனர்.

700 கோடி பேர் வாழும் இந்த பூமியில், தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவேயாகும் எனவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.


Similar posts

Comments are closed.