வடக்கு ஆளுநரை நீக்குமாறுகோரி தெற்கு அரசியல் கட்சி பிரேரணை

Written by vinni   // January 1, 2014   //

vikramaவடக்கு ஆளுநரை நீக்கிவிட்டு அந்தப் பதவிக்கு சிவில் அதிகாரியொருவரை நியமிக்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நவசமசமாஜக் கட்சி தீர்மானம் நிறைவேற்றவுள்ளது.    எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறும் கட்சியின் 30 ஆவது ஆண்டு விழாவிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். “தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுகின்றனர்.

அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன.    எனவே, அவர்களுக்கு கெளரவமானதொரு அரசியல் தீர்வை வழங்கவேண்டும் என்ற யோசனையும் எமது தீர்மானத்தில் உள்ளடக்கப்படும். அத்துடன், வடக்கு இராணுவத்தை முகாமுக்குள் முடக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் அதில் முன்வைக்கவுள்ளோம்.   அதேவேளை, வடக்கு மக்களின் உரிமைகளை அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்காக தெற்கின் ஆதரவைத் திரட்டும் வேலைத்திட்டம் குறித்தும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் விக்கிரமபாகு தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.