சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்

Written by vinni   // January 1, 2014   //

phillipines_blast_002பிலிப்பைன்சில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 261 பேர் படுகாயமடைந்தனர்.

புத்தாண்டை வரவேற்கும் முகமாக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று பிலிப்பைன்சில் கொண்டாட்ட நிகழ்வின் போது சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 261 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து மீட்புப்பணி அதிகாரிகள் கூறுகையில், அதிக சப்தம் வாய்ந்த வெடிபொருள்களை வெடிப்பதன் மூலம் நம்மை சுற்றியுள்ள தீய சக்திகள் விலகி, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பிலிப்பைன்ஸ் மக்கள் நம்புகின்றனர்.

இதனால் ஆபத்துகள் ஏற்படும் என்பதால், அதிக சப்தம் வாய்ந்த வெடிபொருள்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அதையும் மீறி கள்ளச் சந்தைகளில் துப்பாக்கியை வாங்கும் மக்கள், கொண்டாட்டங்களின் போது அதை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு செபு மாகாணத்தில் நடத்தப்பட்ட புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, சக்தி வாய்ந்த வெடியை வெடித்த 8 வயது சிறுவன் வலது கையை இழந்தான்.

அதேபோல் மணிலாவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டதில் 40 வயது பெண்மணி ஒருவர் காயமடைந்தார்.

இதுவரையில் 253 பேர் வெடிவிபத்தாலும், 8 பேர் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்தும் காயமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக, மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் 400 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.