புத்தாண்டில் மகிழ்ச்சி! உலக சாதனை படைத்தார் ஆண்டர்சன்

Written by vinni   // January 1, 2014   //

James-Anderson-300_1மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் 36 பந்தில் சதம் அடித்த உலக சாதனை படைத்தார்.

நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.

முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது. இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது போட்டி குயிண்ஸ்டவுனில் நடக்கிறது. மழை குறுக்கிட்ட காரணத்தினால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து போட்டி 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் டுவைன் பிராவோ, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணிக்கு கப்டில் (1) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த மெக்கலம் (33) நிலைக்கவில்லை. டெய்லர் (9) தாக்குபிடிக்கவில்லை. பின் ரைடருடன் இணைந்த கோரி ஆண்டர்சன் புயல் வேகத்தில் ஓட்டங்களை குவித்தார். அவர் 36 பந்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.

இதற்குமுன் கடந்த 1996ல் பாகிஸ்தான் வீரர் சயிட் அப்ரிடி 37 பந்தில் சதம் அடித்தே உலக சாதனையாக இருந்தது.

எதிர்முனையில் இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த ரைடர், 45 பந்தில் சதம் அடித்தார். இவர் 104 ஓட்டங்களை எடுத்த போது ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார்.

கோரி ஆண்டர்சன் தொடர்ந்து அதிரடியாக துடுப்பெடுத்தாட 21 ஓவர் முடிவில், நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 283 ஓட்டங்களை குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 21 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 124 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.


Similar posts

Comments are closed.