களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

Written by vinni   // December 31, 2013   //

2014_0022014ம் ஆண்டை இன்முகத்தோடு வரவேற்க உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

உலகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்கள் மற்றும் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கவிருக்கிறது.

மக்களும் மிகுந்த உற்சாகத்துடன், இன்முகத்தோடும், சிறப்பான கொண்டாட்டங்களுடனும் புத்தாண்டை இனிதே வரவேற்க தயாராகி வருகின்றனர்.

நள்ளிரவு 12 மணி ஆனவுடன் வானவேடிக்கைகள் கண்ணை கவர, விஸ் யூ ஹேப்பி நியூ இயர் என்ற வாழ்த்து விண்ணை பிளக்கும்.

நாசா விண்வெளி விஞ்ஞானிகள், விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களை வீடியோ மூலம் டைம்ஸ் ஸ்கொயர் கட்டடம் முன்பு கூடியிருக்கும் மக்களுக்கு தெரிவிக்க உள்ளனர்.

முதன்முறையாக வீடியோ மூலம் விண்வெளி வீரர்கள் தோன்றி மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்க உள்ளனர்.


Similar posts

Comments are closed.