ஸ்பெஷல் சதத்துடன் விடைபெற்ற காலிஸ்

Written by vinni   // December 31, 2013   //

india_southafrica_2test_005தென் ஆப்ரிக்காவின் காலிஸ் டெஸ்ட் அரங்கில் இருந்து வெற்றியுடன் விடை பெற்றார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 18 ஆண்டுகள் விளையாடிய காலிஸ், நேற்று டர்பனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

தென் ஆப்ரிக்கா அணிக்காக கடந்த 18 ஆண்டுகள் விளையாடியது சிறந்த தருணம்.

சரியான நேரத்தில் ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். இதுவரை சொந்த சாதனைகளுக்காக ஒருபோதும் விளையாடியதில்லை. அணியின் வெற்றிக்காக மட்டுமே விளையாடினேன்.

டெஸ்ட் அரங்கில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சினின் சாதனைகளை முறியடிப்பது எளிதானதல்ல.

கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தது கூடுதல் சிறப்பு.

90 ஓட்டங்களை எட்டியவுடன், வழக்கமான நேரங்களில் இருப்பதை விட கூடுதல் நெருக்கடி ஏற்பட்டது.

கடைசியில் சிறப்பான அனுபவத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து விட்டது, ஸ்பெஷலானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ணத் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கிண்ணத்தை வெற்றி பெற முயற்சிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.