நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் கலந்துரையாடல்!

Written by vinni   // December 30, 2013   //

2013-12-28-14.38.09சனிக்கிழமை வட கிழக்கு லண்டன் Eastham இல் மக்கள் சந்திப்பு ஒன்று நடை பெற்றது.

இதில் பல பொது மக்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு கடந்த கால செயட்பாடுகள் பற்றியும் வரும் மார்ச் 2014 நடை பெற இருக்கும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையை எதிர்கொள்ளத் தயராகும் சிறீலங்காவுக்கு எதிராக தமிழர் நாம் ஒன்று பட்டு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

 இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற் பாடுகளுக்கு மக்கள் தமது ஆதரவு என்றும் இருக்கும் என்றும் .இது போன்ற கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் நடத்தப்பட வேண்டும் என்றும் பலர் கருத்து கூறினார்கள். வட கிழக்கு லண்டன் உறுப்பினர்களால் ஒழுங்கு செய்யப்பட இக் கலந்துரையாடலில் :

 நாடு கடந்த் தமிழீழ அரசாங்கத்த்தின் கௌரவ உறுப்பினர்களான திரு ஆறுமுகம் ,திருமதி வாசுகி முருகதாஸ், திரு நிமலன் , திரு மணிவண்ணன் ,திரு அகிலன் ,திரு யோகி,திரு இராஜாலிங்கம், திரு முருகதாஸ் ,திரு குணசீலன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்த்தனர்


Similar posts

Comments are closed.