பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சீன அதிபர்

Written by vinni   // December 30, 2013   //

chiசீன அதிபராக ஸி ஜின்பிங் பதவி வகிக்கிறார். இவர் பெய்ஜிங் நகரில் உள்ள ஓட்டல்கள் மற்றும் உணவகங்களில் நேற்று திடீரென ஆய்வு மேற் கொண்டார். அப்போது ஒரு ஓட்டலுக்கு சென்ற அவர் அங்கு உணவு வகைகளை சாப்பிட விரும்பினார். ஆனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

ஏராளமான பொது மக்கள் ‘கியூ’ வரிசையில் நின்று உணவு வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தனர். எனவே அவரும் பொது மக்களுடன் கியூ வரிசையில் நின்று உணவு வகைகளை வாங்கினார்.

பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட ரொட்டி வகைகள், வெங்காய பன் ரொட்டிகள், பச்சை காய்கறிகள், வறுத்த ஈரல், போன்றவற்றை வாங்கி ருசித்து சாப்பிட்டார் அதற்குரிய பணம் ரூ.220 (சீன பணம் 21 யுவான்) கொடுத்தார்.

அதிபர் தங்களுடன் சமமாக ‘கியூ’வில் நின்று சாப்பிட்டதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர். அதற்காக அவரை பாராட்டினர்.

சீனாவில் இதுவரை மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியே வருவதில்லை. ஆனால் அதிபர் ஸி ஜின்பிங் கின் இந்த நடவடிக்கை பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரை பாராட்டி இணைய தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.