ரூ.60 லட்சம் செலவு செய்து மதுவிருந்து வைத்த‌ பாப் இசை தம்பதி

Written by vinni   // December 30, 2013   //

981c717e-d343-46f9-8e18-7432c511f458_S_secvpfமதுவிருந்துக்கு பாப் இசை தம்பதி ரூ.60 லட்சம் செலவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகி பியன்ஸ் (32), ராக் இசை பாடகர் ஜேஷ் (44). இவர்கள் இருவரும் கணவன்– மனைவி ஆவர்.

இவர்கள் ஜார்ஜியாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து கொடுத்தனர். அதில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

விருந்தின்போது துசே மற்றும் ஏஸ் ஆப் ஸ்பேட்ஸ் உயர்ரக மது வகைகள் பரிமாறப்பட்டன. அதன் ஒவ்வொரு பாட்டிலும் தலா ரூ.20 ஆயிரம் ஆகும். விருந்தில் நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் பரிமாறப்பட்டன.

எனவே அந்த விருந்தில் மட்டும் மது வகைக்கு ரூ.60 லட்சம் செலவிடப்பட்டது. இந்த ஆண்டில் மது விருந்துக்கு மட்டும் மிக அதிக அளவில் செலவு செய்தது இந்த ஜோடிதான் என அமெரிக்காவின் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.