தென்னாபிரிக்க தூதுவர் கூட்டமைப்புடன் சந்திப்பு

Written by vinni   // December 30, 2013   //

TNA-logoசிறிலங்காவுக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்காவுக்கான தென்னாபிரிக்க தூதுவர் ஜொப்ரி டொய்ட்ஜ், கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இவர் நல்லூர் கந்தசாமி கோவில், வல்லிபுர ஆழ்வார் கோவில், மற்றும் நயினாதீவு ஆகிய இடங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

யாழ்.கோட்டை, பொது நூலகம் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வந்துள்ள தென்னாபிரிக்கத் தூதுவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, வடக்கு மாகாணசபையின் நிர்வாகம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆகியன குறித்து தென்னாபிரிக்கத் தூதுவர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.