சந்திரிகா, ராஜபக்சவுக்கு சவால் ஆனவர் அல்ல!கெஹலிய கூறுகின்றார்

Written by vinni   // December 30, 2013   //

santhirikaமுன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவுக்கு எந்­த­வ­கை­யிலும் சவா­லா­ன வர் அல்ல என்று ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

எமது நாட்டு மக்கள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவு­ட­னேயே உள்­ளனர். அவரின் வேலைத்­திட்­டங்­களை எதிர்­பார்த்­துள்­ளனர். மக்­களை பொறுத்­த­வரை கதா­பாத்­தி­ரங்கள் என்­பது முக்­கி­ய­மல்ல. மாறாக யார் என்ன கொள்­கையில் உள்­ளனர் என்­பதே முக்­கி­ய­மாகும்.

அந்த கோணத்தில் நோக்­கு­கையில் ஜனா­தி­பதி மஹிந்­தவின் கொள்­கை­களை மக்கள் முழு­மை­யாக ஏற்­றுள்­ளனர் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை பொது வேட்­பா­ள­ராக நிறுத்­து­வது தொடர்பில் அர­சியல் கட்­சிகள் மட்­டத்தில் ஆரா­யப்­பட்­ட­தாக வெளி­வரும் தக­வல்கள் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவை ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ள­ராக நிறுத்­து­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­வ­தாக தக­வல்கள் வந்­துள்­ளன. ஆனால் அவை குறித்து மேல­தி­க­மாக எந்த விட­யமும் தெரி­ய­வில்லை.

ஆனால் சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ச­வுக்கு எந்­த­வ­கை­யிலும் சவா­லா­னவர் அல்ல. இதனை உறு­தி­யாக கூற முடியும்.

மக்­களை பொறுத்­த­வரை கதா­பாத்­தி­ரங்கள் என்­பது முக்­கி­ய­மல்ல. மாறாக முன்­வைக்­கப்­ப­டு­கின்ற வேலைத்­திட்­டங்­களும் கொள்­கை­க­ளுமே முக்­கி­ய­மா­ன­வை­யாகும்.

அந்­த­வ­கையில் பார்க்­கும் ­போது ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவின் வேலைத்­திட்­டங்­க­ளையும் கொள்­கை­க­ளையும் நாட்டு மக்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். அவரின் வேலைத்­திட்­டங்­களை மக்கள் எதிர்­பார்த்­துள்­ளனர். அவற்­றுக்­காக காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவை மக்கள் முழு­மை­யாக விரும்புகின்றனர் என்றார்.


Similar posts

Comments are closed.