கடைசி டெஸ்டில் சதம் அடித்து அசத்திய காலிஸ் : 3 சாதனைகளுடன் ஓய்வு பெறுகிறார்

Written by vinni   // December 29, 2013   //

1499636_657544990970961_1807182414_nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி 334 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன் எடுத்திருந்தது. காலிஸ் 78 ரன்னுடனும், ஸ்டெய்ன் ரன் ஏதும் எடுக்காமலும் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் காலிஸ் சதம் அடித்தார். அவருக்கு இது 45-வது சதம் ஆகும். இதன்மூலம் டெஸ்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றார். 51 சதங்களுடன் இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர் முதல் இடத்தில் உள்ளார்.

ஏற்கனவே, இந்த போட்டியுடன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக காலிஸ் அறிவித்திருந்தார். தனது கடைசி போட்டியில் சதம் அடித்த சந்தோசத்துடன் காலிஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

டர்பன் டெஸ்டில் 200 கேட்ச் பிடித்து சாதனைப் படைத்தார். இதனுடன் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்த டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை கைப்பற்றியுள்ளார். அதிக ரன் குவித்தவர்களில் சச்சின் முதல் இடத்திலும், ரிக்கி பாண்டிங் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இந்த டெஸ்டில் அதிக கேட்ச், சதம் மற்றும் ரன் ஆகிய 3 சாதனைகளுடன் காலிஸ் ஓய்வு பெறுகிறார்.


Similar posts

Comments are closed.