புத்த சமயத்தை அடிப்படையாக கொண்ட இராணுவத்தினர் மனித உரிமைகளை மீற மாட்டார்கள் – மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா

Written by vinni   // December 29, 2013   //

7.        Hospital in the openஇலங்கை அமைதியான கலாசாரத்தை கொண்ட மனிதர்கள் வாழும் நாடு என்பதால் இராணுவத்தினர் மனித உரிமைகளை மீற மாட்டார்கள் என வன்னி பிராந்திய இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார்.

அம்பேபுஸ்ஸ இராணுவத்தினர் சிங்க படைப் பிரிவின் தலைமையகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது புத்த சமயத்தை அடிப்படையாக கொண்டது. நாங்கள் பழிவாங்க மாட்டோம்.காணிகளை கொள்ளையிடுவதில்லை. நாடுகளை கொள்ளையடிப்பதில்லை. அமைதியான கலாசாரத்தை கொண்ட மனிதர்கள். இதனால் இராணுவத்தினர் மனித உரிமைகளை மீற மாட்டார்கள்.

உலகில் அதிகமாக கூறும் வார்த்தை என்னவென்று கேட்டால் நாங்களும் அம்மா என்போம். இரண்டாவது வார்த்தை என்னவென்று கேட்டால் இராணுவம் என்போம். காரணம் அவர்களே எங்களை பாதுகாக்கின்றனர்.

இலங்கை தீவு மிகவும் அழகானது. இலங்கை என்ற நாடு மிக முக்கியமானது. வெளிநாட்டு சக்திகளுக்கு இந்த நாட்டை பெற முடிந்தால் பெற்றுக்கொள்வார்கள்.

இதன் காரணமாகவே சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. படையினர் இல்லாமல் 9 கிலோ கிராம் குண்டை அமெரிக்காவால் போட முடியும்.

எமது பிக்குகள் கொலை செய்யப்பட்டனர். தலதா மாளிகைக்கு குண்டு வைத்தனர். ஸ்ரீமகா போதி மீது தாக்குதல் நடத்தினர். அப்படி செய்த பயங்கரவாதிகள் 12 ஆயிரம் பேர் சரணடைந்தனர். எமது ஜனாதிபதி அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார்.

அவர்களுக்கு உணவு கொடுத்து புனர்வாழ்வளிக்கப்பட்டன. அவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொள்ள உதவிகள் வழங்கப்படுகின்றன. அப்படியானால் ஏன் அமெரிக்கா இவ்வளவு தகவல்களை தேடுகிறது. இலங்கை நியூசிலாந்தை போலிருந்தால் இப்படி மனித உரிமைகள் குறித்து தேட மாட்டார்கள்.

ருவாண்டாவில் 10 லட்சம் மக்கள் கொலை செய்யப்பட்டனர். ஏன் அந்த நாடு குறித்து மனித உரிமை அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று நான் கேட்டேன். அதில் பயனில்லை என்று அவர்கள் கூறினார்கள் என்றார்.


Similar posts

Comments are closed.