மீண்டும் காதலியுடன் ஜேக்கஸ் கல்லிஸ்

Written by vinni   // December 29, 2013   //

jakel_kallis_003தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜேக்கஸ் கல்லிஸ் தனது காதலியான மொடல் அழகி ஷமோன் ஜார்டிமுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் கல்லிஸ் டர்பனில் தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீப காலமாக பிரிந்திருந்த தனது முன்னாள் காதலி ஷமோனுடன் அவர் மீண்டும் இணைந்துள்ளார்.

6 வருடக் காதலை இடையில் கல்லிஸும், ஷமோனும் முறித்துக் கொண்டு தத்தமது வழியில் சென்று கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் இடையிலான பிரிவு இருவரது அன்பையும் உணரச் செய்துள்ளதாகவும், இதனால் இருவரும் மீண்டும் நெருக்கமாகியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

கல்லிஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும், ஷமோனை அவர் திருமணம் செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷமோன் ஒரு மொடல் அழகி ஆவார். அதேசமயம் நடிகையாகவும் இருக்கிறார். கல்லிஸ் குறித்து ஷமோன் கூறுகையில், அருமையான ஜென்டில்மேன் கல்லிஸ். எந்தப் பெண்ணுக்கும் அவரைப் பிடிக்கும். இப்படிப்பட்டவர்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அவர் எப்போதும் என்னை சிரிக்க வைப்பார். கடும் மன அழுத்தத்தில் இருந்தாலும் கூட அவரது பேச்சு என்னை வாய் விட்டு சிரிக்க வைத்து விடும். அதேசமயம், அவர் எப்போதும் கூலாக இருப்பார் என்றும் இது போதாதா ஒரு பெண்ணுக்கு, அந்த ஆணைப் பிடித்துப் போக எனவும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.