27 வயது மகளை சிறை வைத்த தாய்

Written by vinni   // December 29, 2013   //

jailநான்கு ஆண்டுகளாக மகளை வீட்டுக்குள் சிறை வைத்த தாய், தானும் வெளியுலக தொடர்பே இல்லாமல் வசித்து வந்தது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தேவாஸ் பகுதியை சேர்நதவர் மிருதுளா. அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். இவரது மகள் தீப்தி (27).

மிருதுளாவின் கணவரும் மகனும் இறந்து விட்டனர். இதனால் மிகுந்த மன வருத்தம் அடைந்த மிருதுளா, ஒரு வருடம் முன்பு கட்டாய ஓய்வு பெற்றார். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் மகளை வீட்டுக்குள் சிறை வைத்துள்ளார்.

அக்கம்பக்கத்தினருடன் பேசுவதையும் அறவே நிறுத்திவிட்டார். வெளியுலக தொடர்பே இல்லாத தீவில் வசிப்பது போன்று வீட்டுக்குள் அவர்கள் இருந்தனர்.

பிளஸ் 2 படித்த தீப்தி, அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தவர். மேற்படிப்பு படிக்கவும் அனுமதிக்கவில்லை.அக்கம் பக்கத்தினர் யாராவது வந்து கதவை தட்டினால் கூட, அவர் களை வீட்டுக்குள் மிருதுளா அனுமதிப்பதில்லை. கதவை லேசாக திறந்து தலையை மட்டும் நீட்டி, ‘இங்கு ஏன் வந்தீர்கள். போய் விடுங்கள்‘ என்று கூறிவிட்டு கதவை சாத்திவிடுவார்.

வெளிச்சத்துக்காக ஜன்னல் கதவை கூட திறப்பதில்லை. நான்கு ஆண்டுகளாக இதே நிலை தொடர்ந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் விரைந்து வந்த பொலிசார் இருவரையும் மீட்டனர்.

வீட்டுக்குள் சென்றபோது, அங்கு தீப்தி படுத்த படுக்கையாக கிடந்தார். அவரால் நடக்கக்கூட முடியவில்லை.உடனடியாக அவசரஊர்தி வரவழைக்கப்பட்டு, இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தீப்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் மிருதுளாவுக்கு மன நல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கணவன், மகன் ஆகியோரை இழந்த துக்கத்தில் நான்கு ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த சம்பவம் அப்பகுதியில பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.