பாகிஸ்தானில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

Written by vinni   // December 29, 2013   //

 

AK-47 weapons seized from two Britons along with their driver and interpreter are presented to the media in Kabulபாகிஸ்தானில் சட்ட விரோதமாக இயங்கி வந்த 2 ஆலைகளில் இருந்து ஏராளமான வெடிகுண்டுகள், மனித வெடிகுண்டு ஆடைகள், டெட்டனேட்டர்கள் போன்றவற்றை பாதுகாப்பு படை வீரர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் பகுதியில் தாலிபான் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் அங்குள்ள சமன் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சட்ட விரோதமாக இயங்கி வரும் வெடிகுண்டு தயாரிக்கும் 2 ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அங்கிருந்து தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடும் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் 7 வெடிகுண்டு ஆடைகள், 5 கிலோ பால் பேரிங்ஸ், 17,500 ஜெலட்டின் குச்சிகள், 23 ராக்கெட் வெடிகுண்டுகள், 8,000 டெட்டனேட்டர்கள், 564 கிலோ பொட்டாசியம் குளோரைடு போன்றவை பறிமுதல் செய்யப்பட்டதாக எல்லையோர பாதுகாப்புப் படை ஐஜி இஜாஸ் ஷாகித் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

 


Similar posts

Comments are closed.