புது வருடத்தில் இஸ்ரேல், பாலஸ்தீனம் செல்கிறார் ஜனாதிபதி மஹிந்த

Written by vinni   // December 29, 2013   //

mahinda rajapakshaஇஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதமளவில் இரு நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

இஸ்ரேலுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இஸ்ரேல் ஜனாதிபதி சேமோன் பெரேஸை சந்திக்கவுள்ளார்.

பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இஸ்ரேல் – இலங்கைக்கு இடையில் நல்லுறவு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின் பாலஸ்தீனம் செல்லும் ஜனாதிபதி மஹிந்த அந்நாட்டு ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.