ஒரு குழந்தை கொள்கையை தளர்த்தியது சீனா

Written by vinni   // December 29, 2013   //

ChinaBabyPolicyகுடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை சீனா தளர்த்தியுள்ளது.
தேசிய மக்கள் பேரவையின் நிலையியற் குழுவினால் உத்தியோகபூர்வமாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தம்பதியினரில் ஒருவர் அவரது குடும்பத்தில் ஒரே பிள்ளையாக இருப்பின் அவர்கள் இரண்டு பிள்ளைகளை பெற்றுக் கொள்ள முடியும் என தேசிய மக்கள் நிலையியற் குழுஅறிவித்துள்ளது.

கடந்த மாதம் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்’தைகளின் பின்னரே இந்த கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சீன சனத்தொகையில் ஏற்பட்ட அதீத வளரச்சியினை கட்டுப்படுத்துவதற்கு சீனா குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற கொள்கையை அமுல்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.