யாழ் மாவட்டத்தில் பொலிஸ் நிலையங்களையும் பொலிஸ் காவலரண்களையும் அதிகரிக்க வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா

Written by vinni   // December 28, 2013   //

dougயாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையங்களையும் பொலிஸ் காவலரண்களையும் அதிகரிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கூட்டத்தில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய காலமாக கொள்ளை, பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்களின் பாதுகாப்பை வலுப்படுத்த தற்போதுள்ள பொலிஸ் நிலையங்களை விட மேலதிகமான பொலிஸ் நிலையங்களை ஏற்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் பொலிஸாரின் இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும். குடாநாட்டில் உள்ள பொலிஸ் நிலையங்களில் இடப் பற்றாக்குறை காணப்படுகிறது. சில பொலிஸ் நிலையங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டிடங்களில் இயங்கி வருகிறது.

அவற்றின் உரிமையாளர்கள் தமது கட்டிடங்களை திரும்ப கேட்பதால், புதிய பொலிஸ் நிலையங்களை நிர்மாணிக்க அரச காணிகளை தேடிப்பிடித்து அவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பிரதேச செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபருக்கும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


Similar posts

Comments are closed.