இசையமைப்பாளர் இளையராஜா இதயசிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

Written by vinni   // December 28, 2013   //

ilaiyarajaஇசையமைப்பாளர் இளையராஜா இதயசிகிச்சை முடிந்து நலமாக வீடு திரும்பியுள்ளார்.
சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த டிசம்பர் 23ம் திகதி இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனரி ரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி-ஸ்டென்ட் சிகிச்சை செய்யப்பட்டது.

இளையராஜாவுக்கு பூரண ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கி ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் செவ்வாய்க்கிழமை முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கி இளையராஜா ஓய்வெடுத்தார்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் வீடு திரும்பியுள்ளார்.


Similar posts

Comments are closed.