12 மாநில முதலமைச்சர்களுடன் காங்கிரஸ் உப தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை

Written by vinni   // December 28, 2013   //

rahul-gandhi-25409313இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 12 மாநில முதலமைச்சர்களுடன் காங்கிரஸ் உப தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காங்கிரஸ்சின் அதிகாரத்தின் கீழுள்ள மணிப்பூர், மிசோரம், அசாம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, ஹீமாச்சல் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்ரா, அருணாச்சலப் பிரசேதம், கேரளா, மெகாலயா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தச் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

அத்துடன், காங்கிரஸ்சின் சிரேஷ்ட அமைச்சர்களான ஏகே அந்தோனி, சுசில்குமார் ஷிண்டே, ப சிதம்பரம் மற்றும் அஹமட் படேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அண்மையில் நடைபெற்று முடிந்த டெல்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம் உள்ள மாநிலங்களை தக்க வைத்துக் கொள்ளவும், ஏனைய மாநிலங்களில் வெற்றிபெறுவது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவப் பாதுகாப்பு சட்டமூலம், ஊழலுக்கு எதிரான லோக்பால் பிரேரணை மற்றும் லோக்ஆயுக்தா சட்டமூலம் ஆகியவற்றை அமுல்படுத்துவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.


Similar posts

Comments are closed.