எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்து 23 பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு

Written by vinni   // December 28, 2013   //

Tamil-Daily-News_70265924931ஆந்திராவில் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு எகஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து மகாராஷ்டிர மாநிலம் நான்டட் சென்று கொண்டிருந்தது.

அதிகாலை 3.25 மணி அளவில் அனந்தப்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, ரயிலின் குளிர்சாதனப் பெட்டியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

தொடர்ந்து தீ பரவியதால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் செய்வதறியாது கூச்சலிட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கி 23 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தில் சிக்கிய சில பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தீப்பிடித்தவுடன் ரயில் நிறுத்தப்பட்டதால் எஞ்சிய பெட்டிகளுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து காரணமாக அனந்தப்பூர் மார்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே உயர் அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்தில் முகாமிட்டு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்து குறித்து விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.