இலங்கையின் அரச மற்றும் இராணுவ தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை!-

Written by vinni   // December 28, 2013   //

David-Cameron-007இலங்கையின் அரச தலைவர்கள் மற்றும் இராணுவ தலைவர்கள் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடைவிதிக்கவும் பொருளாதார ரீதியான தடைகளை ஏற்படுத்தவும் பிரித்தானியா யோசனை முன்வைக்க உள்ளதாக தெரியவருகிறது.

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்று முன்வைக்கப்பட உள்ளது. பிரித்தானியா தலைமையிலான நாடுகளின் இந்த யோசனையில், பிரித்தானியாவின் முதலீடுகளை இலங்கையில் குறைப்பது, அரச மற்றும் இராணுவ தலைவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிப்பது, டொலர்களின் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களை குறைப்பது உட்பட பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கம் செயற்பட்டுள்ள விதம் குறித்து விசாரணை செய்வதற்காக அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கை வரும் அவர் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். இதனடிப்படையில் நிஷா தேசாய் அமெரிக்க அரசாங்கத்திற்கு முன்வைக்கும் அறிக்கையின் பிரகாரம் அமெரிக்கா இலங்கை சம்பந்தமான தனது யோசனையை முன்வைக்க உள்ளது.


Similar posts

Comments are closed.