வீடுகளை உரியவாறு கட்டாவிட்டால் காணியும், பணமும் சுவீகரிக்கப்படும்

Written by vinni   // December 28, 2013   //

Internally displaced people (IDP) wait for police to search their bus at a checkpoint on the A-9 road in Vavuniyaஇந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படுகின்ற வீடுகளை கட்டத் தவறும் பட்சத்தில்இ வீடுகட்ட தெரிவு செய்யப்பட்ட காணியையும் இதற்காக திறக்கப்பட்ட வங்கக் கணக்கிலுள்ள பணத்தையும் அரசாங்கம் சுவீகரித்துக் கொள்ளுமென எழுதப்பட்டுஇ முல்லைத்தீவில் பொதுமக்களிடம் வற்புறுத்தி கையெப்பம் பெறப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வீடுகளைக் முழுதாக கட்டி முடிப்பதை உறுதி செய்யும் நோக்குடனேயே இவ்வாறான செய்ற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்கள் தரப்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மக்களிடம் இவ்வாறு கிராம சேவகர்கள் இவ்வாறு இதுகுறித்து கடிதமொன்றை எழுதிஇ அதில் கையெப்பம் பெற்று வருவது தெரியவநற்துள்ளது.

இந்தியாவின் விட்டுத் திட்டத்தைப் பெற்றுக் கொள்கின்ற எனக்கோ அல்லது எனது குடும்பத்திற்கோ இலங்கையில் எந்த பகுதியிலும் நிரந்தரவீடு இல்லை. இந்தவிட்டுத் திட்ட உடன்படிக்கையை சுய நினைவுடன் வாசித்தே கையொப்பமிடுகிறேன்.

குறிக்கப்படும் காலத்திற்குள் எனக்குரிய வீட்டை அமைத்துக் கொள்ளவில்லையாயின் அவ்வீட்டிற்றகாக செலுத்தப்பட்ட முழுத் தொகையையும் திருப்பி செலுத்துவேன் என்றும் அவ்வாறு செலுத்தத் தவறும் பட்சத்தில் அரச நிதியில் கட்டப்பட்ட வீட்டையும் வீடு அமைந்திருக்கின்ற காணியையும் அவ்வீட்டிற்காக திறக்கப்பட்ட வங்கிக் கணக்கிலுள்ள பணத்தையும் அரசு மீளச் சுவீகரித்துக் கொள்ளும் என்றும் இதனை உணர்ந்து இவ்வீட்டைக் கட்டிமுடிப்பதற்கு சுயவருப்பம் தெரிவித்தே ஒப்பமிடுகிறேன் என அந்தக் கடிதங்களில் எழுதப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.