தாய்லாந்தில் போராட்டம்: பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை

Written by vinni   // December 27, 2013   //

242318705Untitled-1தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுவடைந்து வருகிறது. பிரதமர் இங்லக் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி முன்னாள் எம்.பி. சுதீப் தாக்சுபன் தலைமையில் கடந்த மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள் நடப்பதால் நாடு முழுவதும் அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

போராட்டங்களின் தீவிரத்தைத் தொடர்ந்து காபந்து பிரதமராக ஆட்சிப்பொறுப்பைத் தொடரும் பிரதமர் இன்க்லக், பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

ஆனால் பதவி விலகாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறி போராட்டக்காரர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் இன்று 30 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி பதிவு செய்தனர்.

அப்போது வெளியில் திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மைதானத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களை பொலிசார் தடுத்தபோது வன்முறை வெடித்தது. அவர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.

இதையடுத்து பொலிசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையில் ஒரு பொலிஸ் அதிகாரி சுடப்பட்டார்.

மார்பில் குண்டு பாய்ந்ததையடுத்து அவரை ஹெலிகாப்டரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். ஆனால், அங்கு சென்ற சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவத்தைத் அப்பகுதியில் கூடுதல் பொலிசார் குவிக்கப்பட்டனர்.

 


Similar posts

Comments are closed.