பாகிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட இந்திய மாணவர்

Written by vinni   // December 27, 2013   //

india,pakistanஇந்திய உளவாளி என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாணவர் ஒருவர் பாகிஸ்தான் பல்கலைகழகத்தில் துன்புறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலம் பட்காமைச் சேர்ந்தவர் இஷ்ரத் நாவேத்.

இவர் கடந்த 2008ம் ஆண்டில் பி.எச்.டி ஆய்வுக்காக பாகிஸ்தானின் பிரபலமான காயிதே ஆசம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

இந்நிலையில் பல்கலைக்கழக கண்காணிப்பாளருடன் துணை பேராசிரியர் ஒருவரும் இணைந்து தன்னை மிரட்டி துன்புறுத்துவதாக இஷ்ரத் புகார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், பாகிஸ்தானின் காயிதே ஆசம் பல்லைகழகத்தில் பயோடெக்னாலஜி பிரிவில் ஆய்வுப்படிப்புக்காக சேர்ந்தேன்.

அங்குள்ள கண்காணிப்பாளரும், துணைப் பேராசிரியரும் என்னை இந்திய உளவாளி என கூறி மனரீதியாக துன்புறுத்தி வந்தனர்.

மேலும் நான் சேகரித்த முக்கிய ஆய்வு மாதிரிகளை திருடி மற்றவர்களுக்கு கொடுத்து விட்டனர்.

எனது சகோதரி இறந்தபோதுகூட சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

2011ல் எனது ஆய்வுக் கட்டுரையை சமர்பித்த பின்பும், என்னை ஊருக்கு செல்ல அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பல்கலைகழக நிர்வாகம் மற்றும் உயர் கல்வி ஆணையத்திடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளர்.


Similar posts

Comments are closed.