சர்வதேசம் நம்பிக்கை வாக்குகளை வழங்க வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்

Written by vinni   // December 27, 2013   //

GL-Peiris-colombo-telegraph1இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்கம் மற்றும் புனரமைப்புக்களுக்காக சர்வதேச சமூகம் தமது நம்பிக்கை வாக்குகளை வழங்க வேண்டும் என்று அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தமது மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் அனைத்து மக்களினதும் சமயங்களினதும் அரசியல் பிரிவுகளினதும் உறுதித்தன்மையை கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது.

இதனை கருத்திற்கொண்டே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சுமார் 300 இலக்குகளை கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்துள்ளார்.

2012 ஆம் 2013 ஆம் ஆண்டுகளில ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை விரைவுப்படுத்தும் கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தது.

இந்தநிலையில் 2014 ஆம் ஆண்டு மார்ச்சில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் சர்வதேச விசாரணையைக்கோரும் பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளது.

எனினும் இவ்வாறான அச்சுறுத்தல் நடவடிக்கை இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளை குழப்பிவிடும் என்று அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமது பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்ளும் பொறிமுறையை கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் பிரசாரம் காரணமாக சில நாடுகள் இலங்கையின் சுய விசாரணைகளை ஏற்கவில்லை என்றும் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.