காணாமல் போனோர் சொத்தழிவு தொடர்பான மதிப்பீடு சர்வதேச தரம் வாய்ந்தது!– புள்ளிவிபர மதிப்பீட்டு திணைக்களம்

Written by vinni   // December 27, 2013   //

warcrime-pictureபோரின் போது ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து தாம் மேற்கொள்ளும் கணக்கெடுப்பு உரிய சர்வதேச நியம அடிப்படையிலேயே இடம்பெறுவதாக இலங்கையின் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுவதைப் போன்று இது ஒரு அரசியல் நடவடிக்கை அல்ல என்று தொகை மதிப்பீட்டு திணைக்கள பணிப்பாளர் டி சி ஏ குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

களத்தில் உள்ள அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் தகவல்களையும் கொண்டே இந்த தரவுகள் பெறப்படுவதாகவும் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது அரசியல் நோக்கம் கருதி கருத்துக்களை வெளியிடுவதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.

ஒருவர் காணாமல் போனார் என்று கூறப்பட்டால்ää அது தொடர்பான உண்மை அறிதலை தாம் உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஆவணங்கள் திரட்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த விடயத்தில் தமது திணைக்களம் ஒளிவுமறைவு இன்றி செயற்படுவதாக தொகை மதிப்பீட்டு திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பணிகளுக்காக 15,500 அரச அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் இதன் முதல்கட்ட அறிக்கை எதிர்வரும் பெப்ரவரியில் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.