சமியால் தப்பியது மேற்கிந்திய தீவுகள்

Written by vinni   // December 26, 2013   //

westநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, மேற்கிந்திய தீவுகளின் அபார பந்துவீச்சால் திணறியது.

முடிவில் 42.1 ஓவரில் 156 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அதிகபட்சமாக பிரண்டன் மெக்கலம் 51 ஓட்டங்களும், நாதன் மெக்கலம் 47 ஓட்டங்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகளின் அணி சார்பில், வெய்ன் பிராவோ 4 விக்கெட்டும், ராம்பால், ஹோல்டர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதவித்தது.

ஒரு கட்டத்தில் 121 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது.

ஆனால் டேரன் சமியின் நேர்த்தியான ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி 27.3 ஓவரிலேயே 8 விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டேரன் சமி 27 பந்தில், 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 43 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

நியூசிலாந்து தரப்பில் மெக்கிளேநாகன் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார், ஆட்டநாயகன் விருதை டேரன் சமி தட்டிச் சென்றார்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


Similar posts

Comments are closed.