ஹைதி நாட்டில் படகு விபத்து: 18 பேர் பலி

Written by vinni   // December 26, 2013   //

150904-99-aboard-asylum-seeker-boatகரிபியன் தீபகற்ப பகுதிகளில் உள்ள ஹைதி நாட்டின் கடற்பகுதியில், 50 பேர் கொண்ட ஒரு குழுவினர் நேற்று காலை துர்க் மற்றும் கார்காய்ஸ் தீவுகளுக்கிடையே பாய்மரப்படகில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதைக்கண்ட மீட்புக்குழுவினர் அந்த படகை துறைமுகம் நோக்கி இழுத்து வந்தனர்.

வெளிநாடுகளில் தஞ்சம் புகும் நோக்கில் சென்ற நிறைய பேர் அந்த சிறிய படகில் இருந்ததால் வரும் வழியில் அது கவிழ்ந்தது. இதில் படகிலிருந்து விழுந்த 50 பேரும் கடல் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். உடனடியாக இழுவை போட்டில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 32 பேரை காப்பாற்றினர். ஆனால், 18 பேரின் உயிரை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

சம்பவப்பகுதிக்கு அமெரிக்க கடற்காவல் படையினர் ஹெலிகாப்டர்களில் விரைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டவர்களை துர்க்ஸ் மற்றும் கார்க்காய்ஸ் குடியிரிமை தடுப்பு மையங்களில் அடைத்து வைத்துள்ளனர். மேலும் இதுபோன்று சட்டவிரோதமாக குடிபுக சென்றார்களா என்பது பற்றி ஹைதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2010-ம் ஆண்டு ஹைதியில் ஏற்பட்ட பூகம்ப பாதிப்புகளில் இருந்து மீளத்துடிக்கும் மக்கள் அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி செல்கின்றனர் என்று குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.