துரித உணவுகளை சாப்பிட வேண்டாம்

Written by vinni   // December 25, 2013   //

mcஅமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட பிரபல துரித உணவகமான மெக்டொனால்ட்சிற்கு உலகெங்கும் கிளைகள் உண்டு. இந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கான இணையதளத் தொகுப்பில் கடந்த திங்கட்கிழமை அன்று துரித உணவகங்களில் விற்கும் உணவுகளை உண்ணவேண்டாம் என்ற அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

மற்றொரு அறிவிப்பில் வீட்டில் சமைக்கும் உணவுகளுக்கு எளிதான மாற்று உணவு விரைவில் தயாரிக்கப்படும், நியாயமான விலையில் கிடைக்கும் போன்ற தகவல்கள் தரப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து பரபரப்பான வாழ்க்கை முறைகளுக்கு வசதியாகவும், பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மலிவாகவும் இருக்கும் இந்த துரித உணவு வகைகள் அதிக கலோரி, கொழுப்பு சத்து, சர்க்கரை மற்றும் உப்பு கலந்துள்ளதால் உடல் எடை கூடிவிடும் வாய்ப்பும் இத்தகைய உணவுகளில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட மெக்டொனால்ட்ஸ் நிறுவனமோ, அதன் ஊழியர்களோ இல்லாமல் மூன்றாம் தரப்பு விற்பனையாளர் ஒருவரால் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த அறிக்கைகள் ‘சுகாதாரக் கலைக் களஞ்சியம்’ என்ற பிரிவின் கீழ் வெளிவந்துள்ளன.

அத்துடன் மெக்டொனால்ட்ஸ் அளிக்கும் பர்கர், பொறித்த கிழங்கு மற்றும் சோடா கலந்த ஒரு மெனுவை அந்த அறிக்கை ஆரோக்கியமற்ற தேர்வு என்று குறிப்பிட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இத்தகைய கொழுப்பு, சர்க்கரை, உப்பு கலந்த உணவு வகைகளைத் தவிர்க்கவேண்டும் என்றும் அதில் வெளியிடப்பட்டிருந்தது.

திங்கள் பிற்பகல் வெளியிடப்பட்டிருந்த இந்த அறிக்கையை மெக்டொனால்ட்ஸ் மறுத்துள்ளது. சமீபத்தில் தங்கள் மெனுவில் சேர்க்கப்பட்டிருக்கும் முட்டையின் வெள்ளைக்கரு, பழங்கள் போன்றவற்றினால் செய்யப்பட்டுள்ள தரமான உணவு வகைகளை அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், கடந்த மே மாதம் நடைபெற்ற பங்குதாரர்கள் கூட்டத்தில் பேசியமெக்டொனால்ட்ஸ் தலைமை நிர்வாகி டான் தாம்ப்சன், தங்கள் உணவகங்கள் ஆரோக்கியமற்ற உணவுவகைகளை விற்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.