நியூசிலாந்து தொடரில் சாமுவேல்ஸ் நீக்கம்

Written by vinni   // December 25, 2013   //

marlon20070605wநியூசிலாந்துக்கு சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0–2 என்ற கணக்கில் இழந்து விட்டது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி வெஸ்ட் இண்டீஸ்–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் நாளை நடக்கிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு திடீர் பின்னடைவாக ஆல்–ரவுண்டர் மர்லன் சாமுவேல்ஸ் காயம் காரணமாக தாயகம் திரும்புகிறார்.

வலது மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர். அவருக்கு பதிலாக 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் சாட்விக் வால்டன் சேர்க்கப்பட்டு உள்ளார்


Similar posts

Comments are closed.