ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்குத் தாமதமாகக் குவிந்துள்ள விண்ணப்பங்கள்

Written by vinni   // December 25, 2013   //

obamaஅமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிமுகப்படுத்திய மருத்துவக் காப்பீட்டு திட்டம் ஆரம்பித்தபோது மக்களிடையே வரவேற்பு அதிகமாகக் காணப்படவில்லை.கடந்த 2010 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டம் பல சட்ட சவால்களை சந்தித்தது மட்டுமில்லாமல் அவரது புகழ் வெகுவாகக் குறைவதற்கும் காரணமாக இருந்தது.

வரும் 2014 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் இந்தத் திட்டம் வழி செய்துள்ளது என்று கருதப்படுகின்றது.  சமீப காலங்களில் இந்தத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களில் விதிமுறைகள் தளர்வு செய்யப்பட்டு புதிய உறுப்பினர்கள் பதிவு செய்யவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை இத்தொழிலில் உள்ள காப்பீட்டு நிறுவனங்கள் வரும் ஜனவரி 10 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டிக்க ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த திங்களன்று முடிவடைவதாகத் தெரிவிக்கப்பட்ட இந்தக் காப்பீட்டு திட்டத்திற்கு 2 மில்லியன் மக்கள் இணையதளத்தில் பார்வையிட்டதையும், 2,50,000 விசாரணைகள் பெறப்பட்டதையும் கருத்தில் கொண்டு அரசு நேற்று ஒரு நாள் நீட்டிப்பும் அளித்தது.

இதுமட்டுமின்றி விண்ணப்பத்தை பூர்த்தி செய்யமுடியாதவர்களும் அரசின் தகவல் மையங்களை அணுகலாம் என்றும் குறிப்பிட்டிருந்த அரசு இதற்கான எந்த காலக்கெடுவையும் குறிப்பிடவில்லை.  ஒபாமாவின் உள்நாட்டு முயற்சியான மலிவு பராமரிப்பு திட்டத்தின் கீழ் அதிக பட்ச மக்கள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் வண்ணமே விதிமுறைகள் தளர்த்தப்பட்டு காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டுள்ளன..

கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி புதுப்பிக்கப்பட்ட இந்த காப்பீட்டுத் திட்டத்தின் இலக்கு தொழில்நுட்ப கோளாறுகளையும், அரசியலில் வழிகோலும் தவறான நடவடிக்கைகளையும் மாற்றும்விதமாகவே நீட்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

மாநில மற்றும் மத்திய அரசின் மதிப்பீடுகளின்படி திங்கட்கிழமை தவிர்த்து இதுவரை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தை மேற்கொண்டுள்ளனர். செவ்வாய்கிழமை பெறப்பட்ட இறுதி கணக்கீடுகள் வெளியிடப்படவில்லை என்றபோதிலும் ஜனவரி முதல் தேதிக்கான மக்களின் ஆர்வம் பெருமளவில் உள்ளதாக நிர்வாகத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

புதுவருட தினத்தை ஒட்டி ஆயிரக்கணக்கானவர்கள் இந்த திட்டத்திற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். நடுஇரவு வரை திறந்திருந்த அழைப்பு மையங்களில் ஆயிரக்கணக்கான அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதேபோல் இணையதளம் வழியாகவும் ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர் என்றுமருத்துவ உதவி மற்றும் மருத்துவ சேவைகள் மையங்களின் செய்தித் தொடர்பாளரான ஜூலி பட்டாய்லி தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.