எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவது குறித்து பாகிஸ்தான் கவனம்

Written by vinni   // December 25, 2013   //

pakiஇலங்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவது குறித்து பாகிஸ்தான் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் ஈடுபடுவது குறித்து பாகிஸ்தான் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

தற்போது மன்னார் கடற் பகுதியில் இந்தியாவின் கெய்ரன் நிறுவனம் எண்ணெய் அகழ்வு தொடர்பிலான ஆய்வில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பாகிஸ்தான் பாராளுமன்ற சபாநாயகர் சர்தார் அய்யாஸ் சாதீக் எண்ணெய் அகழ்வு குறித்து அறிவித்துள்ளார்.

இலங்கையுடன் மிக நெருங்கிய உறவு பேணப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சீனிக் கைத்தொழில் துறையில் இரு தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.