சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்க‌ ஐ.நா நடவடிக்கை – பாலித கொஹணே

Written by vinni   // December 25, 2013   //

palitha_CIசர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிக்கும் முனைப்புக்களை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை எடுக்கும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் ஆறாம் கமி;ட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சட்ட விவகாரக் கமிட்டியின் தலைவராக பாலித கொஹணே கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத இல்லாதொழிப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் சர்வதேச பிரகடனமொன்று வரையப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2001 செப்டம்பர் 11 தாக்குதல்களின் போது பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் நிலவி வந்த ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பல்வேறு வழிகளில் பயங்கரவாதம் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத  இல்லாதொழிப்பு தொடர்பில் உலக நாடுகளுக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சில நாடுகள் கோரி வருவதாகவும் இது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு உத்தேச பிரகடனம் தயாரிக்கப்படும் எனவும் டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.