தெற்கு சூடானில் சவக்குழிகள் கண்டுபிடிப்பு: ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை

Written by vinni   // December 25, 2013   //

navanithampillai-srilanka-01-07-112011-ம் ஆண்டு உதயமான தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீர் மாயர்தித்தின் ஆட்சி நடக்கிறது. டிங்கா பழங்குடி வகுப்பை சேர்ந்த சல்வா கீர் கடந்த ஜூலை மாதம் நூயெர் பழங்குடி இணத்தை சேர்ந்த துணை அதிபர் ரீக் மசூரை பதவியிலிருந்து அகற்றினார்.

இதையடுத்து அதிபரின் படைக்கும் ரீக் மசூரின் புரட்சிப்படைக்கும் இடையே அங்கு தற்போது கடுமையான உள்நாட்டு போர் நடக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடந்து வரும் இந்த சண்டையில் கொடூரமான இனப்படுகொலைகளும், கற்பழிப்புகளும் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

இதில் புரட்சிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் வளம் மிக்க போர் நகரத்தில் சண்டை தீவிரம் அடைந்துள்ளது. இதில் சில பகுதிகளை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த சண்டையில் பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, போராளிகள் வசமுள்ள பெண்டியூ நகரில் மிகப்பெரிய சவக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மேலும் இரண்டு சவக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இந்த சவக்குழியில் 34 பேரின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் நிறை பேர் இங்கு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கின்றன


Similar posts

Comments are closed.