மாகாண சபைத் தேர்தலில் கூட்டணி அமைக்கா விட்டாலும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும்: ஜனநாயகக் கட்சி

Written by vinni   // December 25, 2013   //

Retired General Sarath Fonseka, listens to a speech introducing him before speaking to labor unions from the Marxist backed opposition party in Colomboஎதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் எந்த கட்சியுடனும் கூட்டணியை ஏற்படுத்தாத போதும் ஜனாதிபதித் தேர்தல் போன்ற முக்கியமான தேர்தல்களின் தமது தீர்மானத்தில் மாற்றங்கள் இருக்கும் என ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த மானவடு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 80 வீதமான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விட்டனர். எனினும் கட்சியின் முதலமைச்சர் வேடபாளர் இன்னும் பெயரிடப்படவில்லை.

அனோமா பொன்சேகாவை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்வது குறித்தும் கட்சி இதுவரை முடிவுகள் எதனையும் எடுக்கவில்லை.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பெண் வேட்பாளர்களை அதிகளவில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


Similar posts

Comments are closed.