பொது இடத்தில் நிர்வாண திருமணம்

Written by vinni   // December 24, 2013   //

aus_marriage_001.w245அவுஸ்திரேலியாவில் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்த தம்பதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த பெண் ஸிப்சி தவுப். இவர் பாரில் நடன பெண்ணாக பணியாற்றினார்.

பின்னர் நிர்வாண கிளப்பில் உறுப்பினராக சேர்ந்தார். அங்கு உறுப்பினரான ஜேம்ஸ் ஸ்மித்தை, ஸிப்சி தவுப் காதலித்தார். எனவே இருவரும் பொது இடத்தில் நிர்வாணமாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இதற்கு சங்க உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்கவே, வழக்கமான திருமண உடையுடனும், தங்களது சங்க உறுப்பினர்களுடனும் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பிரபலமான சிட்டி ஹாலுக்கு சென்றனர்.

அங்கு திடீரென இருவரும் ஆடைகளை களைந்து விட்டு நிர்வாணமாக நின்றனர், சங்க உறுப்பினர்களும் நிர்வாணமாயினர்.

இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர், இருவரும் வழக்கமான திருமண சடங்கை பொது இடத்தில் நிர்வாணமாக நடத்தி விட்டு ஒருவரை யொருவர் தழுவி முத்தமிட்டனர்.

பின்னர் இருவரும் கட்டி அணைத்து நடனமாட தொடங்கினர். நிர்வாண கிளப் உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து கையில் அட்டைகளுடன் கோஷமிட்டனர். தகவல் தெரிந்தவுடன் விரைந்து வந்த பொலிசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Comments are closed.