தேசிய கீதத்தை அவமரியாதை செய்தார் ரணில்;விமல் குற்றச்சாட்டு

Written by vinni   // December 24, 2013   //

Ranil_wickramasingheஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய கீதத்தை அவமரியாதை செய்தார் என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

தேசிய கீதத்திற்கு மதிப்பளிக்க முடியாத நபர்கள் எவ்வாறு நாட்டை ஆட்சி செய்ய முடியாது. அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டமொன்று நடைபெற்றது.

தேசிய கீதம் இசைக்கப்பட்ட போத சிலர் நின்று கொண்டு உறங்கினார்கள்.

தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது ரணில், தனது சேர்ட்டை சரி செய்தார்.

நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும் போது எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பது பாடசாலைக் காலத்திலேயே எமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், எதிர்க்கட்சித் தலைவர் தனது சேர்ட் கையை மடித்துக் கொண்டிருக்கிறார் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.