நடுரோட்டில் அன்புத் தொல்லையில் சிக்கிய நடிகை

Written by vinni   // December 24, 2013   //

kabadiya_002மும்பையில் பிரபல தொலைக்காட்சி நடிகைக்கு நடு ரோட்டில் காரில் வந்த ஆசாமி தொந்தரவு கொடுத்தது தொடர்பாக பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை பைசுல்லா பகுதியில் வசித்து வரும் தொலைக்காட்சி நடிகை அலெபியா கபாடியா(28), சனிக்கிழமை மாலை பந்த்ரா குர்லா காம்ப்ளச்சில் இருந்து வீட்டிற்கு தனது குழந்தையுடன் காரில் சென்றுகொண்டிருந்தார். உடன் அவரது தோழியும் சென்றுள்ளார்.

அப்போது ஒரு சொகுசு காரில் வந்த நபர், கபாடியாவின் காரின் அருகே தனது காரை உரசியபடி நிறுத்தினான். பின்னர், அந்த நபர் கபாடியாவிடம், நீங்கள் பேஸ்புக்கில் இருக்கிறீர்களா? நான் உங்களுடன் பேஸ்புக் நண்பராகலாமா? என்று கேட்டு நச்சரித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்க கபாடியா மறுத்தபோதும் விடாமல் அவருடன் பேச விரும்புவதாக அந்த நபர் கூறியுள்ளார். இதனால் அவரை புகைப்படம் எடுத்த கபாடியா, பேசாமல் சென்றுவிடும்படி கூறியுள்ளார்.

இந்த மிரட்டலுக்கும் பயப்படாத அந்த நபர் மீண்டும் தொந்தரவு கொடுத்துள்ளார். பின்னர் அவர் தனது கைப்பேசியை எடுத்து உதவிக்கு சிலரை அழைத்ததும், அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இது தொடர்பாக கபாடியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் தனக்கு தொந்தரவு கொடுத்த நபரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, தான் சந்தித்த பிரச்சனை குறித்து விவரித்துள்ளார்.


Similar posts

Comments are closed.