இளம் கால்பந்தாட்ட வீரர் மைதானத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

Written by vinni   // December 24, 2013   //

player_dead_002ஸ்காட்லாந்தை சேர்ந்த வளர்ந்து வரும் கால்பந்து வீரர் ஜேமி ஸ்கின்னர், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது மரணமடைந்தார்.
14 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகள் நேற்று லண்டனில் நடந்தது.

இதில் டைன்கேஸ்டில் எஃப்.சி அணி சார்பில் விளையாடிய ஜேமி, ஆட்டம் நடந்து கொண்டிருந்த போதே திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

மைதானத்தில் இருந்த வீரர்கள் மற்றும் நடுவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு சிகிச்சை அளிக்க முற்பட்டனர்.

ஆனால், அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார், இத்தகவலை குறித்த அணி நிர்வாகம் உறுதிசெய்துள்ளது.

இதேபோன்று ஹைபர்னியன் கால்பந்து கிளப் அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் டேவிட் பால்(18), எடின்பர்கில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.

டேவிட்டின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என அணி நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது.


Similar posts

Comments are closed.